Ajith to act in Amitabh Bachchan’s Film ? | Kungumam – July 15 , 2016

35622

Read  “Ajith to act in Amitabh Bachchan’s Film ? ”  Article published at Kungumam weekly Magazine dated July 15 , 2016.

அழகான ஒரு புதன்கிழமை… கேளம்பாக்கம் சாயிபாபா கோயிலில் ரொம்பவே சிம்பிளாக அஜித்தின் அடுத்த படமான ‘ஏ.கே 57’ பூஜை. தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், இயக்குநர் சிவா, அனிருத் தவிர ஒரு சில  டெக்னீஷியன்களோடு வெறும் அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது பூஜை. அன்று அஜித் சென்னையில்தான் இருந்தார்… ஆனால் வழக்கம் போல ஆப்சென்ட்! ‘‘பூஜை போட்டாச்சு.. தல ஷூட்டிங் எப்போ? ரிலீஸ் எப்போ?’’ – என அஜித்  ரசிகர்களின் ஆவலும் எதிர்பார்ப்பும் ஃபுல் ஸ்பீடில் கிளம்பிவிட்டது. சுவாரஸ்ய தகவல்கள் இனி…

* ஏ.கே 57 படத்தின் ஹீரோயின் சாய்ஸாக முதலில் சிவா மனசில் இருந்தது தமன்னாதான். அஜித் மறுத்துவிடவே, அனுஷ்காவிடம் பேசினார்கள். அனுஷ்கா தெலுங்கில் ரொம்ப பிஸி. பெரிய பெரிய ப்ராஜெக்ட்கள் கைவசம் வைத்திருக்கிறார். தவிர, தமிழில் சூர்யா படமும் இருக்கிறது. அஜித்தின் பிறந்த நாளன்று பூஜை போட்டு ஜூனில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்ற நிலை இருந்ததால் அனுஷ்காவும் சம்மதித்திருந்தார்.

ஆனால் திட்டமிட்ட தேதிகளில் படம் துவங்காததால் அவரிடம் கால்ஷீட் இல்லை. ‘என்னை அறிந்தால்’ தொடங்கும் முன்பே அஜித்துடன் நடிக்க விரும்பினார் காஜல் அகர்வால். அப்போது அவர் ஆசை நிறைவேறவில்லை. தயாரிப்பு தரப்பு மற்றும் சிவாவின் சாய்ஸாக இப்போது காஜல் இருக்கிறார். ஆனால், ஹீரோயின் யாரென இன்னும் முடிவாகவில்லை.

* அண்ணன் – தம்பி, அண்ணன் – தங்கை என இதற்கு முன் சென்டிமென்ட்டை கையில் எடுத்த சிவா, இந்த முறை டிடெக்டிவ் ஏரியா பக்கம் திரும்பியிருக்கிறார். படத்தின் காமெடியனாக முதலில் பேசப்பட்டவர் சந்தானம். ஆனால், அவர் ஹீரோவாக நடிக்கவே கவனம் செலுத்துவதால் கருணாகரனும், தம்பி ராமையாவும் கமிட் ஆகியிருக்கிறார்கள். துப்பறியும் கதையில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் கெத்தான வில்லனைத் தேடி வருகிறார்கள்.

* உடல்நிலைக்காக ஓய்வில் இருந்ததால், கொஞ்சம் வெயிட் ஏறிவிட்ட அஜித், இப்போது ஜிம்மில் கடுமையாக உழைத்து எடையைக் குறைத்து வருகிறார். முகூர்த்த நாளில் பூஜையைத் தொடங்கிவிட்டாலும், ஆடி மாதம் முடிந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கலாம் என்றே தகவல்கள் சிறகடிக்கின்றன.

* ‘பில்லா 2’ படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது போல, ‘ஏ.கே 57’ யூனிட்டும் வெளிநாடு செல்கிறது.

* ஒரு ஆச்சரியத் தகவல்… அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அமிதாப் பச்சன். அஜித்தின் ‘உல்லாசம்’ படத்தை அமிதாப் தனது ‘ஏபிசி’ நிறுவனத்தின் மூலம் தயாரித்தது நினைவிருக்கலாம். இப்போது அமிதாப் – அஜித் இடையே மீண்டும் பழைய நட்பு துளிர்த்திருக்கிறது. இருவருக்கும் நெருக்கமான நண்பரான பிரபு மூலம், அமிதாப் தமிழில் மீண்டும் களம் இறங்குகிறார்.

சமீபத்தில் மும்பை சென்ற அஜித், அங்கே அமிதாப்பை சந்தித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தை இயக்க இருப்பவர் அட்லியா அல்லது விஷ்ணுவர்தனா என முடிவாகவில்லை. ‘உல்லாசம்’ படத்தில் அஜித் – விக்ரம் இணைந்து நடித்தது போல, அமிதாப்பின் புது ப்ராஜெக்ட்டில் அஜித்துடன் இன்னொரு பெரிய ஹீரோவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது கொண்டாட்டம்!

– மை.பாரதிராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here