Unmanned Flight and Anna University

1785

அண்ணா பல்கலைக்கழகத்தில் குட்டி விமானங்களுக்கான போட்டிகள் 111 கல்லூரி மாணவர்கள் தங்கள் விமானங்களுடன் பங்கேற்கின்றனர் நடிகர் அஜீத்குமாரை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணாவர் குழு சாதனை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா விமானங்களை உருவாக்கும் மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடந்துவருகிறது. குற்றவழக்குகளிலும், மீட்புபணிகளிலும் காவல்துறையினருக்கு உதவி வரும் அண்ணாபல்கலை கழக மாணவர்களின் தக் ஷா குட்டி விமானத்தின் சாதனை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

image

உலகிலேயே அதிக நேரம் பறக்கும் ஆள் இல்லா விமானத்தை தயாரித்து சாதனை படைத்தவர்கள் சென்னை அண்ணா பல்கலைகழக ஏரோனாட்டிக்கல் மாணவர்கள்..!

அவர்களுக்கு சவால் விடுவதற்காகவே இந்தியா முழுவதும் இருந்து 111 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தங்களது குட்டி விமானங்களுடன் களத்தில் குதித்துள்ளனர்..! சிறந்த ஆளில்லா விமான தயாரிப்புக்காண போட்டி கடந்த 3 தினங்களாக அண்ணாபல்கலைகழகத்தில் நடந்து வருகின்றது. ஆளில்லா விமான கண்டுபிடிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 2வது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், 3 வது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது..!

image

இதில் நடிகர் அஜீத்குமாரை ஆலோசகராக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தின் தக் ஷா மாணவர் குழு கண்டுபிடித்துள்ள குட்டி விமானம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தக் ஷா குட்டி விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 7 நிமிடம் வானில் பறந்து உலகசாதனை படைத்தது..!

இந்த குட்டி விமானத்தில் பெட்ரோல் மூலம் எரிசக்தி மின்சாரமாக மாற்றப்படுவதால் அதிக நேரம் இயக்குவதாகவும், வழக்கமாக ரிமோட் மூலம் இயக்குவது போல இல்லாமல் கணினி மூலம் இதனை இயக்குவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு நிலை நிறுத்த இயலும் என்கின்றனர்.

image

2015 வெள்ள மீட்பு பணிகள், உத்தரகாண்ட் பெரு வெள்ளம், குரங்கனி மலை தீவிபத்து மீட்பு பணிகள், சிறுசேரி மென்பொறியாளர் கொலை வழக்கு , கல்குவாரி ஆய்வு என பலவற்றில் உதவிகரமாக இருந்துள்ளது இந்த குட்டி விமானம்..! வெள்ள சேதங்களை துல்லியமாக படம் பிடிக்கும் கேமராவசதி இருப்பதால் அரசின் மற்ற துறையினருக்கும் இந்த விமானம் பேருதவியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க 45 நிமிடம் வானில் பறக்கும் திறனுடைய 4 ஆளில்லா குட்டி விமானங்களை தயாரித்து கொடுத்துள்ளது இந்த மாணவர் குழு..! இந்த போட்டியில் பங்கெடுத்துள்ள குட்டி விமானங்களை பார்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் இத்துறையில் இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற ஊக்கம் ஏற்படுவதாக மாணவி ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

image

10 கிலோ பொருட்களை தூக்கிச்செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானத்தை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு இருதயம் மற்றும் உடல் உறுப்புக்களை போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக தூக்கிச்செல்லும் ஆம்புலன்சாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட இயக்குனர்கள் தாமரை செல்வி, செந்தில்குமார் மற்றும் நடிகர் அஜீத்குமார், அண்ணா பலகலைகழக பேராசிரியர்கள் மருத்துவத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த ரக குட்டி விமானங்கள் 1 நிமிடத்துக்கு 1 கிலோமீட்டர் தூரம் பறந்து செல்லும் சக்தி கொண்டவை, அதிக உயரம் பறக்க கூடியது என்றாலும் தற்போது 200 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே இவற்றை இயக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

மொத்தத்தில் தொழில் நுட்ப உதவியுடன் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்கும் மாணவர்களுக்கு தளராத நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது இந்த போட்டிகள்..!

Published on Polimer News Channel and Website dated 13 , July 2018.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here