Thala Ajith trains Team Dhaksha for Creating History at Australia!

3086

ஆஸ்திரேலியாவில் சாதனை படைக்க ’தக்‌ஷா’ குழுவை தயார்ப்படுத்தும் அஜித் – புகைப்படங்கள்

நடிகர் அஜித் தனது தக்‌ஷா குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித், சினிமாவுக்குப் பிறகு புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம்காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கழைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்‌ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இம்மாதம் நடைபெறும் ஆளில்லா விமானம் பறக்கவிடும் போட்டிகளிலும் சாதனை படைக்க முயற்சித்து வருகிறது.

முன்னதாக அஜித் ஆலோசகராக இருந்து பயிற்சி அளித்து வரும் தக்‌ஷா குழு தயாரித்த ட்ரோன் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால், ஏர் ஆம்புலன்ஸாக இதை பயன்படுத்தலாம் என்று அஜித் ஆலோசனை கூறியிருக்கிறார்.

Published on News 18 TamilNadu dated September 10 , 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here