First Half Investigation – Second Half Action & Sentiment , Vinoth Opens on Valimai (Tamil)

851

‛தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்க ஒருத்தனோட சமநிலை தவறுனா… அவனோட கோபம் எப்படி இருக்கும்னு காட்டுவேன்’… ‘நாங்க நின்னு தெறிக்கவிட இந்த ஒரு பஞ்ச் டயலாக் போதுமே. கிளப்பீட்டீங்க போங்க… நீங்கவாங்க ‘ஏ.கே.’ உங்களுக்காக நாங்க எத்தனை வருஷம்னாலும் வெயிட் பண்றோம்’ என ‘வலிமை’ கிளிம்ஸ், டிரைலர், மேக்கிங், பாடலை கொண்டாடும் ரசிகர்களுக்காக மனம் திறக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.

அஜித், வினோத், ‘வலிமை’ என்ன ஸ்பெஷல்
நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, எப்படி சமாளிப்பது என்பதை நம் சார்பில் ஹீரோ அஜித் சமாளிப்பதே ‘வலிமை’. போலீஸ் உடை அணியாத போலீஸ் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்.இதற்கு முன் அவர் படங்களில் வராத மாஸ் ஆக் ஷன் காட்சிகள் வைத்துள்ளோம்.

சண்டை காட்சிகளில் பைக்கர்ஸ் எங்கிருந்து
சென்னை சினிமா பைட்டர் யூனியன், பெங்களூரு, கோவை, மும்பை, ரஷ்யா என பைக் ரைடில் பயிற்சி பெற்ற குழுவினர் வந்தார்கள். அஜித் 150 கி.மீ.,ல் பைக் ஓட்டுவதை காட்சிப்படுத்துவது தான் சவாலாக இருந்தது. இதற்கு உதவிய வெங்கி தான் அஜித் அடிபட்ட காட்சிகளை வீடியோ எடுத்தார்.

அஜித் படப்பிடிப்பில் அடிபட்டதும் பதட்டம்
கண்டிப்பாக பதட்டம் தான்… அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டு இருந்தால் அடுத்த நாள் 500 பேருக்கு வேலை இருந்திருக்காது. தயாரிப்பாளர், ரசிகர்கள் என பலருக்கு நான் பதில் சொல்ல வேண்டி இருந்திருக்கும், ஆனால் அடுத்த நாள் அஜித் படப்பிடிப்பிற்கு வந்துட்டார்.

‘வலிமை’ அப்டேட் வைரல் ஆனதே
அந்தளவு ரசிகர்கள் ‘வலிமை’க்கு கவனத்தை கொண்டு போயிட்டாங்க. கன்ட்ரோல் பண்ண முடியாத அளவு அப்டேட் போனது உண்மை.

அஜித் உடன் மூன்றாவது முறை கூட்டணி
ஆமா… அடுத்த படத்தில் அவருக்கு நெகடிவ் கதை… கரு மட்டும் கூறியுள்ளேன், வலிமைக்கு பிறகு தான் அடுத்த வேலை. முதல் படத்தில் கதைக்கு ஹீரோ தேடினேன். அடுத்தடுத்த படங்களில் ஹீரோக்களுக்கு கதை எழுத ஆரம்பித்தேன்.

பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டம்
பிரான்ஸ், ஸ்பெயின், என திட்டமிட்டு புரபஷனல் பைக் ரைடர்ஸ் இருந்ததால் ரஷ்யாவில் நடத்தினோம். டிரைலரில் காட்டியபடி பைக்கில் பறந்த அந்த காட்சிகள் அங்கு எடுத்தது.

யுவன் இசையில் விக்னேஷ் சிவன் பாடல்
யுவன் உடன் ஈஸியா பழகலாம். ஓர் ஆண்டாக இசை பணி ஆரம்பிக்கவில்லை. விக்னேஷ் சிவனை வர சொல்லி ஒரே வாரத்தில் ‘வேற மாறி’ பாடல், அம்மா பாடல் ரெடி பண்ணினோம். விக்னேஷ் சிவன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை.

அஜித் ஜோடியாக மும்பை ஹீமாகுரேஷி
ஒரு பிஸினஸ்க்கு தான் அவங்க இந்த படத்தில்… தமிழ் படத்தை ஏன் ஹிந்தி, தெலுங்கில் ரிலீஸ் பண்ரிங்கன்னு கேட்பதில்லை. பிற மொழி ஹீரோயின் வந்தால் கேட்கிறார்கள்…

‘நேர்கொண்ட பார்வை’, வலிமை படங்கள்
‘நேர்கொண்ட பார்வை’ கதை அஜித் எனக்கு கூறியது. ‘வலிமை’ ஒன் லைன் மட்டும் தான் கூறினேன். படப்பிடிப்பில் சில நேரம் ‘இது தான் கதையா வினோத்’னு சிரிச்சுட்டு கேட்பார். முழு கதை முதலில் தெரியாது,

அஜித் கிட்ட நீங்கள் கற்றது, அட்வைஸ்
ஒரு நடிகரா அஜித்தை பார்க்க போனால் நல்ல மனிதராக திரும்பி வருவோம். பெண்கள் மீது அதிக அக்கறை, மரியாதை கொண்டவர். நான் ஒரு முறை கெட்ட வார்த்தை பேசிய போது…’இந்த வார்த்தை பேசாதீங்க’ என அட்வைஸ் பண்ணியதில் இருந்து பேசுவதில்லை.

தயாரிப்பாளர் போனி கபூர் பட்ஜெட்…
40 படம் தயாரித்தவர் அவர். ஒரு விஷயத்தில் உள்ள பிளஸ், மைனஸ் பேசுவார். படத்துக்கு 15 பைக் தலா ஒன்றரை லட்சத்திற்கு, கார்கள், பஸ், லாரி வாங்கி தந்தார். கொரோனாவிலும் அனைவருக்கும் சம்பளம் கொடுத்தார்.

அஜித் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது
அஜித்தின் பலதரப்பு ரசிகர்களை மனதில் வைத்து உருவான ‘வலிமை’யை எல்லாரும் ரசிப்பாங்க, முதல் பாதி இன்வெஸ்டிகேஷன், இரண்டாம் பாதி ஆக் ஷன், சென்டிமென்ட் இருக்கும்.

Published on Dinamalar Dated Jan 23, 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here